தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டாஸ்மாக் மதுக்கடை விரைவில் இடமாற்றம்

டாஸ்மாக் மதுக்கடை விரைவில் இடமாற்றம்

டாஸ்மாக் மதுக்கடை விரைவில் இடமாற்றம்


ADDED : செப் 22, 2026 04:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 22, 2026 04:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை இடமாற்றும் பணிகள் தீவிரமாக நடக்கிறது.

கிணத்துக்கடவு பழைய பஸ் ஸ்டாப் அருகே அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்படுகிறது. அருகில், நிழற்கூரை, ஆட்டோ மற்றும் சரக்கு வாகன ஸ்டாண்ட் உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வந்து செல்லும் நிலையில், மதியம் முதல் இரவு வரை, சிலர் மது வாங்கி வந்து அருந்திவிட்டு, நிழற்கூரையில் படுத்து தூங்குவது தொடர்கதையாக உள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.

இந்த மதுக்கடையை அகற்றக்கோரி அரசியல் கட்சிகள் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பில் பலமுறை மனு வழங்கி உள்ளனர். அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த மதுக்கடையை, வடபுதூர் ஊராட்சி அன்னை சோனியா காந்தி நகரில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, தற்போது மதுக்கடை மற்றும் பார் கட்டுமானப் பணிகள் நடக்கிறது. இந்த இடத்தில், சர்ச், மயானம், குடியிருப்பு இருப்பதால் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இங்கு மதுக்கடை அமைக்க வேண்டாம் என, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us