தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்


ADDED : ஆக 28, 2026 05:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 05:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, பொள்ளாச்சியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டியில் உள்ள, அரசு டாஸ்மாக் குடோன் முன்பாக, தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்கம் சார்பில், பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்ட தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் நலச்சங்க அமைப்பு செயலாளர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த, 23 ஆண்டுகளாக அரசு டாஸ்மாக் கடைகளில் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்கின்றனர். பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், காலம் முறை ஊதியம் கேட்டு தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். ஆனால், இன்றுவரை அரசு செவி சாய்க்காமல், பணியாளர்கள் நலனில் அக்கறை காட்டாமல் இருக்கிறது.

அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கடந்த மாதம் சிறப்பு கூட்டங்கள் நடத்தி, அனைத்து பணியாளர்களும் கடையடைப்பு செய்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது குறித்து முடிவு செய்யப்பட்டது.

ஆனால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் அழைத்ததன் பேரில், ஒரு சில சங்கத்தை சேர்ந்தவர்கள் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதை பெருவாரியான பணியாளர்கள் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. யாருடைய ஆலோசனையும் இல்லாமல் அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளது, ஒட்டுமொத்த பணியாளர்களிடயே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, 30 சதவீத டாஸ்மாக் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. எனவே, பணியாளர்களின் கோரிக்கையை அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால், போராட்டம் தொடரும். அடுத்த கட்டமாக போராட்டத்தை தீவிரப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு, கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us