/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மது பாட்டிலில் 'ஸ்டிக்கர்' ஒட்டுவதற்கு சிரமம் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
/
மது பாட்டிலில் 'ஸ்டிக்கர்' ஒட்டுவதற்கு சிரமம் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மது பாட்டிலில் 'ஸ்டிக்கர்' ஒட்டுவதற்கு சிரமம் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
மது பாட்டிலில் 'ஸ்டிக்கர்' ஒட்டுவதற்கு சிரமம் டாஸ்மாக் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : அக் 04, 2025 11:39 PM

கோவை: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், கோவை மாவட்டத்தில் உள்ள 'டாஸ்மாக்' மதுக்கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நடைமுறையில் உள்ளது. விற்கப்படும் மது பாட்டில்களுக்கு, 10 ரூபாய் கூடுதலாக பெறப்படுகிறது. காலி பாட்டிலை திருப்பிக் கொடுத்தால், அத்தொகை திரும்ப வழங்கப்படுகிறது.
மது வாங்கிய கடையிலேயே, காலி பாட்டில்களை திரும்பத் தர வேண்டும். அதையறிய, ஒவ்வொரு பாட்டிலிலும் ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும். இப்பணியை, 'டாஸ்மாக்' ஊழியர்கள் செய்து வருகின்றனர். ஸ்டிக்கர் ஒட்டும் பணி கூடுதல் சுமையாக இருப்பதால், தனியாக ஊழியர்கள் நியமிக்க, தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். 'டாஸ்மாக்' நிர்வாகம் ஏற்கவில்லை.
அதனால், கோவை மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில், பீளமேட்டில் உள்ள 'டாஸ்மாக்' முதுநிலை மண்டல மேலாளரிடம் பேச்சு நடத்தச் சென்றனர். அதிகாரிகள் சந்திக்க மறுத்ததால், 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜான் கூறியதாவது:
மது பாட்டில்களில், 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டி, காலி பாட்டில் திரும்பப் பெற்று ஒப்படைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே செய்யும் வேலையுடன், இதையும் சேர்ந்து செய்ய முடியவில்லை. தனியாக ஆட்கள் நியமிக்க கோரினோம்.
கோரிக்கையை கண்டுகொள்ளாமல், தொடர்ந்துசெய்யச் சொல்லி வலியுறுத்தி வருகின்றனர். முதுநிலை மண்டல மேலாளரை சந்தித்து பேச வந்தபோது, சந்திக்க மறுக்கின்றனர்.
தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். 6ம் தேதி பேசி முடிவு செய்யலாம் என தெரிவித்ததால், போராட்டத்தை ஒத்திவைத்திருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.