/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தட்கல் மின் இணைப்பு தராமல் அலைக்கழிப்பு
/
தட்கல் மின் இணைப்பு தராமல் அலைக்கழிப்பு
ADDED : ஜன 18, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : உடனடி மற்றும் அவசர தேவைக்கு வழங்கப்படும், தட்கல் விவசாய மின் இணைப்புகள் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது குறித்து, கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறுகையில், ''கோவை மாவட்டத்தில் தட்கல் திட்டத்தின் விவசாய மின் இணைப்பு கேட்டு 3 லட்ச ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்து மூன்றாண்டாகியும் வழங்கப்படவில்லை. விவசாயிகள் மின்வாரிய தலைமை பொறியாளரிடம், பல முறை வேண்டுகோள் வைத்தும் பயனில்லை. இந்நிலை மாற வேண்டும்,'' என்றார்.