/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீரபாண்டி ஊராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்
/
வீரபாண்டி ஊராட்சியில் வரி வசூல் பணி தீவிரம்
ADDED : பிப் 16, 2025 11:37 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், எண். 24 வீரபாண்டி ஊராட்சிக்கு உட்பட்ட மாங்கரை, ஆனைகட்டி, வீரபாண்டி புதூர், பெரியதடாகம் உள்ளிட்ட பகுதிகளில் வரி வசூல் பணியில் வீரபாண்டி ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
ஊராட்சிகளில் வீட்டு வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, உரிம கட்டணங்களை 'ஆன்லைன்' வாயிலாக செலுத்தும் வசதி ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
இதன் வாயிலாக, ஊரக பகுதிகளில் மனை பிரிவுகள், கட்டடம், தொழிற்சாலைகள் தொடங்கவும், தொழில் நடத்துவதற்கான அனுமதிகளும் ஒற்றைச் சாளர முறையில் இணையதளம் வாயிலாக அனுமதி வழங்கப்படுகிறது.
கிராம ஊராட்சிகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் இதர கட்டணங்களை இணைய தளம் வாயிலாகவும் செலுத்தும் வசதி உள்ளது.
இது குறித்து வீரபாண்டி ஊராட்சி செயலாளர் ஆனந்தகுமார் கூறுகையில், ''பொது மக்களின் வசதிக்காக வரி செலுத்த பல்வேறு வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
க்யூ ஆர் கோடு, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், ரொக்கம் ஆகியவற்றின் வாயிலாகவும், பொதுமக்கள் வரி இனங்களை செலுத்தலாம்.
ஊராட்சிக்கு உட்பட்ட குக் கிராமங்கள் தோறும் வரி வசூல் பணியில் நேரடியாக ஈடுபடுவதால், பொதுமக்கள் வரி இனங்களை தாமாக முன்வந்து செலுத்தி வருகின்றனர்.
இத்திட்டத்தில் இதுவரை இரண்டு லட்சம் ரூபாய் வரி வசூல் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.