/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீட்டு மின் இணைப்பை வணிகத்துக்கு மாற்றிய கட்டடங்களுக்கு வரி சீராய்வு
/
வீட்டு மின் இணைப்பை வணிகத்துக்கு மாற்றிய கட்டடங்களுக்கு வரி சீராய்வு
வீட்டு மின் இணைப்பை வணிகத்துக்கு மாற்றிய கட்டடங்களுக்கு வரி சீராய்வு
வீட்டு மின் இணைப்பை வணிகத்துக்கு மாற்றிய கட்டடங்களுக்கு வரி சீராய்வு
ADDED : நவ 01, 2024 10:37 PM
கோவை; கோவை நகரப் பகுதியில் குடியிருப்புக்கான மின் இணைப்பை, வணிக பயன்பாட்டுக்கு மாற்றியிருந்தால், அக்கட்டடங்களுக்கு நேரில் சென்று, உண்மைத்தன்மை கண்டறிந்து, சொத்து வரியை மறுசீராய்வு செய்ய, பில் கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை நகர் பகுதியில், 5.80 லட்சம் வரி விதிப்புதாரர்கள் உள்ளனர். சில பகுதிகளில், குடியிருப்புகள் வணிக கட்டடங்களாக மாற்றப்பட்டு இருக்கின்றன. ஆனால், மாநகராட்சிக்கு பழைய சொத்து வரியே செலுத்தப்படுகின்றன. இதுபோன்ற கட்டடங்களை மாநகராட்சி வருவாய் பிரிவினர் ஆய்வு செய்து, சொத்து வரியை மறுசீராய்வு செய்கின்றனர்.
அடுத்த கட்டமாக, பில் கலெக்டர்களின் மொபைல் போனில் புதிய செயலி பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதில், வீட்டுக்கான மின் இணைப்பு வைத்திருந்து, சமீபத்தில் வணிக பயன்பாட்டுக்கு மாற்றிய விபரங்கள் பெறப்பட்டிருக்கிறது.
வணிக பயன்பாட்டுக்கு மின் இணைப்பு மாற்றப்பட்ட கட்டடங்களில் பில் கலெக்டர்கள் ஆய்வு செய்ய வேண்டும். வீடு இருக்கிறதா; வணிக கட்டடம் இருக்கிறதா; வீடு இருக்கும் பட்சத்தில் எதற்காக வணிக மின் இணைப்பு பெற்றிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். இதற்கு முன் வீடாக இருந்து, தற்போது வணிக பயன்பாட்டுக்கு கட்டடம் மாறியிருந்தால், சொத்து வரியை வணிக டேரிப்-க்கு மாற்றியமைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக, வார்டு வாரியாக பில் கலெக்டர்கள் கட்டடங்களை மறு ஆய்வு செய்து வருகின்றனர்.
பில் கலெக்டர்கள் சிலர் கூறுகையில், 'அடுக்குமாடி குடியிருப்புகளில் போர்வெல் மற்றும் லிப்ட் இயக்குதல் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்கான தனி இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. கள ஆய்வு செய்யும்போது, குடியிருப்புகளில் வணிக நிறுவனங்கள் செயல்பட்டால் சொத்து வரி சீராய்வு செய்யப்படுகிறது' என்றனர்.