/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த டாக்சி ஓட்டுநர் கைது
/
சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த டாக்சி ஓட்டுநர் கைது
சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த டாக்சி ஓட்டுநர் கைது
சிறுமிக்கு பாலியல் சீண்டல் அளித்த டாக்சி ஓட்டுநர் கைது
ADDED : மே 01, 2025 04:36 AM

கோவை : ரயில் நிலையம் பகுதியில், 17 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, டாக்ஸி டிரைவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
கேரளம், பாலக்காட்டை சேர்ந்த தம்பதியினர், தங்களின் 17 வயது மகளுடன் கோவை ஈஷா யோகா மையத்துக்கு செல்ல, நேற்று முன்தினம் ரயிலில் கோவை வந்தனர். ரயில் நிலையம் எதிரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர்.
அவர்கள் ஓட்டலில் இருந்து வெளியே வந்த போது, அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர், சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு, அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.
சிறுமியின் பெற்றோர், பொது மக்களின் உதவியுடன் அந்த நபரை பிடித்து 'கவனித்தனர்'. அந்த நபரை மத்திய அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீஸ் விசாரணையில், அந்த நபர், வேடப்பட்டியை சேர்ந்த சந்தோஷ், 29 என்பதும், சொந்தமாக கார் வைத்து, டாக்சி ஓட்டி வருவதும் தெரியவந்தது. போலீசார் சந்தோஷ் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.