/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கரடியிடம் இருந்து உயிர்தப்பிய தேயிலை தோட்ட தொழிலாளி
/
கரடியிடம் இருந்து உயிர்தப்பிய தேயிலை தோட்ட தொழிலாளி
கரடியிடம் இருந்து உயிர்தப்பிய தேயிலை தோட்ட தொழிலாளி
கரடியிடம் இருந்து உயிர்தப்பிய தேயிலை தோட்ட தொழிலாளி
ADDED : ஜன 26, 2026 05:13 AM

வால்பாறை: வால்பாறை அருகே கரடியிடம் இருந்து உயர்தப்பிய தொழிலாளிக்கு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ளது கல்யாணப்பந்தல் சி.டி.ஆர்., எஸ்டேட். இங்கு நேற்று காலை, 7:20 மணிக்கு தொழிலாளர்கள், தேயிலை செடிக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தேயிலை செடிக்குள் பதுங்கியிருந்த கரடி, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த தோம்தோமர்மு,21, என்ற தொழிலாளியை தாக்கியது.
இதில் கை, கால், தலை ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு, வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் தலைமையிலான வனத்துறையினர், பாதிக்கப்பட்டவரிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேயிலை எஸ்டேட்களில், அதிகாலை நேரத்தில் பணிக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். தேயிலை செடிக்குள் ஏதாவது வன விலங்குகள் உள்ளனவா என கண்டறிந்த பின், பணியில் ஈடுபட வேண்டும். தொழிலாளியை தாக்கிய கரடி குறித்து, மனித வனவிலங்கு மோதல் தடுப்புக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்' என்றனர்.

