/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் உடல் உறுப்பு தானம்; ஐந்து பேருக்கு மறுவாழ்வு
/
ஆசிரியர் உடல் உறுப்பு தானம்; ஐந்து பேருக்கு மறுவாழ்வு
ஆசிரியர் உடல் உறுப்பு தானம்; ஐந்து பேருக்கு மறுவாழ்வு
ஆசிரியர் உடல் உறுப்பு தானம்; ஐந்து பேருக்கு மறுவாழ்வு
ADDED : ஜன 28, 2025 06:24 AM

கோவை : கோவையில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, நல்லூர், சக்தி கார்டனை சேர்ந்தவர் செந்தில் குமார், 54. இவர், கேரள மாநிலம், கோழிப்பாறை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் கேரளாவில் உள்ள அரசு பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியினருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த, 24ம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் படுகாயம் அடைந்த, செந்தில்குமார், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம், மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய, குடும்பத்தார் முடிவு செய்தனர்.
செந்தில்குமாரின் கல்லீரல், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் மற்றும் ஒரு சிறுநீரகம், கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம், 5 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
செந்தில்குமாரின் உடலுக்கு, கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா மற்றும் இருப்பிட மருத்துவ அதிகாரி, பணியாளர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.