/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்டசபை தேர்தல் பயிற்சி பெற புதுடில்லி செல்லும் ஆசிரியர்
/
சட்டசபை தேர்தல் பயிற்சி பெற புதுடில்லி செல்லும் ஆசிரியர்
சட்டசபை தேர்தல் பயிற்சி பெற புதுடில்லி செல்லும் ஆசிரியர்
சட்டசபை தேர்தல் பயிற்சி பெற புதுடில்லி செல்லும் ஆசிரியர்
ADDED : மே 04, 2025 10:26 PM

வால்பாறை, ;வால்பாறையை சேர்ந்த பள்ளி தலைமை ஆசிரியர், புதுடில்லியில் நடக்கும் இரண்டு நாள் தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்கிறார்.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், 2026ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஆயுத்தபணிகளை இந்திய தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பி.எல்.ஓ.,க்கள் எனப்படும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். 10 பி.எல்.ஓ.,களுக்கு ஒரு கண்காணிப்பாளர் வீதம் உள்ளனர். அவர்களுக்கு சில தொழிற்நுட்ப பயற்சிகள் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில், தொகுதிக்கு ஒருவர் வீதம், 234 பேரை தேர்தல் அணையம் தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கு புதுடில்லி துவாரகாவில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில், வரும் 7 மற்றும் 8ம் தேதிகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதுடில்லியில் நடக்கும் இரண்டு நாள் பயிற்சியில், வால்பாறை சட்டசபை தொகுதிக்கு ஓட்டுச்சாவடி அலுவலர் இளங்கோ தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், வால்பாறை செலாளிப்பாறை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பணி தலைமை ஆசிரியராக உள்ளார்.
இது குறித்து, இளங்கோ கூறுகையில், ''கடந்த 28 ஆண்டுகளாக தேர்தல் பணியாற்றி வருகிறேன். இதற்காக கலெக்டரிடம் இருந்து, 6 விருதுகள் பெற்றுள்ளேன். இந்திய தேர்தல் ஆணையத்தில் வால்பாறை சட்டசபை தொகுதி பி.எல்.ஓ.,வாக கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. பயிற்சிக்கு பின் இன்னும் சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றுவேன்,'' என்றார்.