ADDED : ஜூன் 11, 2026 06:39 AM
அ நிறம் | அளவு
பெ.நா.பாளையம்: கணுவாய் தொடக்கப்பள்ளியில் பணியில் உள்ள மூத்த ஆசிரியருக்கு விதிகளை மீறி, கட்டாய மாற்றுப் பணி வழங்கப்பட்டது. இதை கண்டித்து பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார தலைவர் மணிமேகலை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ரங்கநாத மூர்த்தி, மாநில செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
