/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
/
ஆசிரியர் தின விழா; பள்ளிகளில் கொண்டாட்டம்
ADDED : செப் 04, 2025 10:53 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே நெகமம் ஸ்வஸ்திக் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தாளாளர் தீபா காந்தி தலைமை வகித்தார்.டாக்டர் ராதாகிருஷ்ணன் திருவுருவ படத்துக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மலர் துாவி மரியாதை செய்தனர். பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* புளியம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தின விழா நடந்தது. அதில், பள்ளி தலைமையாசிரியர் சித்ரா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
* பூசாரிப்பட்டியில் உள்ள பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தேசிய ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது மனித நுண்ணறிவே, செயற்கை நுண்ணறிவே என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது.
உடுமலை ஆர்.ஜி.எம். மெட்ரிக் பள்ளி முதல்வர் சகுந்தலா, கனியூர் எஸ்.வி. மெட்ரிக் பள்ளி முதல்வர் ரவிச்சந்திரன், பாரத் வித்யா நிகேதன் பள்ளி முதல்வர் சந்தோஷ்குமார் பங்கேற்று பேசினர். கல்லுாரி தாளாளர் சிவானிகிருத்திகா, கல்லுாரி முதல்வர்கள் கண்ணன், தனபாலகிருஷ்ணன் பேசினர்.
வால்பாறை * வால்பாறை துாய இருதய ஆரம்ப பள்ளியில் நடந்த ஆசிரியர் தின விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அன்பரசி தலைமை வகித்தார். விழாவில் ஆசிரியர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக பள்ளி மாணவர்கள் சார்பில் தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
* வால்பாறை நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கலைசெல்வி தலைமையில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முன்னதாக, பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பூ செண்டு கொடுத்து வரவேற்றனர்.
* முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் கணேஷ் மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பரிசு வழங்கி, ஆசிரியர்களை கவுரவித்தனர்.