/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
/
பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய அரசுக்கு ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜன 01, 2026 05:15 AM
கோவை: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் உள்ளதாக, ஆளும் தி.மு.க., அரசை பல்வேறு சங்கங்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தமிழக சிறப்பாசிரியர் சங்கமும் கொடி உயர்த்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை மற்றும் தொழிற்கல்வி ஆகிய பாடங்களைக் கற்பிக்க, 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தற்போது தொகுப்பூதியமாக 10,000 ரூபாயும், கூடுதலாக 2,500 ரூபாய் உதவித்தொகையும் என இரண்டு தவணைகளாக, ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.
2012ம் ஆண்டு முதல் 14 கல்வி ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் இவர்களுக்கு, இதுவரை எவ்விதப் பணிப் பலன்களும் சலுகைகளும் வழங்கப்படவில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.
குறிப்பாக, பணியின் போது உயிரிழந்த ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு, எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும்; வருங்கால வைப்பு நிதி, மருத்துவக் காப்பீடு போன்ற அடிப்படை பாதுகாப்புகள் கூட கிடைக்கவில்லை என்றும், அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் ஆனந்தகுமார் கூறுகையில், எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, பல கட்ட போராட்டங்களை நடத்தி விட்டோம். ஆனால், தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஒவ்வொரு முறையும் ஊதிய உயர்வுக்கு போராட வேண்டியதுள்ளது.
மாநிலம் முழுவதும் தற்போது 1,500 முழுநேர சிறப்பாசிரியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். பல காலிப்பணியிடங்கள் இருந்தும், அவற்றை நிரப்ப அரசு முன்வரவில்லை. பணி ஓய்வு காரணமாக ஏற்படும் காலிப்பணியிடங்களும் அப்படியே கிடக்கின்றன, என்றார்.

