/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வட மாநில குழந்தைகளை படிக்க வைக்க வீடு வீடாகச் சென்று அழைத்த ஆசிரியர்கள்
/
வட மாநில குழந்தைகளை படிக்க வைக்க வீடு வீடாகச் சென்று அழைத்த ஆசிரியர்கள்
வட மாநில குழந்தைகளை படிக்க வைக்க வீடு வீடாகச் சென்று அழைத்த ஆசிரியர்கள்
வட மாநில குழந்தைகளை படிக்க வைக்க வீடு வீடாகச் சென்று அழைத்த ஆசிரியர்கள்
ADDED : செப் 26, 2025 05:32 AM

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் வட்டாரத்தில், ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் தங்கி பணிபுரிகின்றனர். அவர்களது குழந்தைகள் கல்வி கற்காமல் இருப்பதை தவிர்க்க, பள்ளி கல்வித்துறை சார்பில், வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களது குழந்தைகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து கல்வி கற்பித்து வருகின்றனர்.
தொண்டாமுத்துார், முத்திபாளையம், புத்துார், வடிவேலாம்பாளையம், காளியண்ணன்புதுார் அரசு துவக்கப்பள்ளிகளில், வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள் 250 பேர் படித்து வருகின்றனர். இம்மாணவர்கள், சரிவர பள்ளிக்கு வருகை தராமல் உள்ளனர்.
அவர்களது வருகைப் பதிவு வெகுவாக குறைந்தது. தொண்டாமுத்துார் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ்பாபு, அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சாரதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள், வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதிகளுக்கு நேற்று நேரில் சென்று, குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டியதன் அவசியம், கல்வி கற்பதால் அவர்களது வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பள்ளியில் சேர்க்கப்படாமல் இருந்த, 10 குழந்தைகளுக்கு நேற்று மாணவர் சேர்க்கை நடத்தினர். நேற்று முதல், அம்மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர்.