/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
/
போக்சோ வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
ADDED : மார் 21, 2025 11:07 PM
கோவை; போக்சோ வழக்கில், கேரள வாலிபருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கேரள மாநிலம், மூணாறை சேர்ந்தவர் அருண்குமார்,31. கோவையிலுள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்த அவர், ஏழு வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தார். புகாரின் பேரில், கோவை கிழக்கு பகுதி மகளிர் போலீசார் விசாரித்து, 2023, நவ., 14ல், அருண்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் மீது, கோவையிலுள்ள முதன்மை போக்சோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.
விசாரித்த நீதிபதி குலசேகரன், குற்றம் சாட்டப்பட்ட அருண்குமாருக்கு, 20 ஆண்டு சிறை, 12,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.