/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
/
கஞ்சா கடத்தல் வழக்கில் வாலிபருக்கு 4 ஆண்டு சிறை
ADDED : நவ 05, 2025 11:10 PM
கோவை: கோவை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார், 2022, ஆக. 22ல், ரயில்வே பாதுகாப்பு படை போ லீசாருடன் சேர்ந்து, கோவை ரயில்வே ஸ்டேஷனில் சோதனை நடத்தினர். ஒன்றாவது பிளாட்பாரத்தில், சந்தேகத்தின் பேரில் நின்ற, கேரள மாநிலம், திருச்சூர், ஆழிக்கோடு பகுதியை சேர்ந்த ரெஜிஸ்,23, என்பவர் வைத்திருந்த பேக்கில் சோதனையிட்ட போது, ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது.
அவரை கைது செய்து, கோவை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த நீதிபதி ராஜலிங்கம், குற்றம் சாட்டப்பட்ட ரெஜிசிற்கு, நான்காண்டு சிறை, 30,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் சிவகுமார் ஆஜரானார்.

