/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெண்ணின் ஆபாச புகைப்படத்தை நண்பர்களுக்கு அனுப்பிய வாலிபர்; 'போலீஸ் அக்கா' உதவியால் வசமாக சிக்கினார்

ADDED : அக் 29, 2024 11:56 PM

கோவை: பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து, நண்பர்களுக்கு அனுப்பிய வாலிபரை, கவுண்டம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
கோவை, கவுண்டம்பாளையத்தை அடுத்துள்ள கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது பெண். தனியார் கல்லுாரியில் இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி. இவருக்கு, ஆன்லைனில் 'பிரீ பையர்' என்ற விளையாட்டை விளையாடும் பழக்கம் இருந்தது.
இந்நிலையில், விளையாட்டின் மூலம் திருப்பத்துார் மாவட்டம், தொக்கியம் பகுதியை சேர்ந்த கோகுல்நாத், 23 என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி போனில் அழைத்து பேசி வந்துள்ளனர். இளம்பெண்ணை சந்திக்க கோகுல்நாத் கோவை வந்து சென்றுள்ளார். நாளடைவில் இது காதலாக மாறியது.
இருவரும் வீடியோ காலில் பேசினர். அப்போது அப்பெண்ணிற்கு தெரியாமல் கோகுல்நாத் ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். கோவை வந்த போது, பெண்ணுடன் தனிமையில் இருந்த போதும், ஆபாசமாக தனது மொபைலில் படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இளம் பெண் கோகுல்நாத்துடன் தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த கோகுல்நாத், தனது போனில் இருந்த பெண்ணின் ஆபாச படங்களை, தனது நண்பர்களுக்கு 'வாட்ஸ் அப்' வாயிலாக அனுப்பினார்.
இதையறிந்த அப்பெண், கோவை மாநகர போலீசாரின், 'போலீஸ் அக்கா' திட்டத்தின் கீழ் பணியாற்றும், பெண் போலீஸ் ஒருவரிடம் தெரிவித்தார்.
அவரது உதவியுடன் கோகுல்நாத்தை வரவழைத்து, அவரது போனை பறித்து அதில் இருந்த படங்களை அழித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
'போலீஸ் அக்கா' திட்டத்தின் வாயிலாக, தற்போது வரை 500க்கும் மேற்பட்ட மாணவியருக்கு, சட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.