ADDED : ஜூலை 04, 2026 08:04 PM

அ நிறம் | அளவு
கோவை: தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு டெட் தேர்வு நடந்தது.
இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல்தாள் தேர்வுக்கு மாவட்டத்தில் 2,230 பேர் விண்ணப்பித்திருந்தனர். எட்டு மையங்களில் நடைபெற்ற தேர்வை 2,147 பேர் எழுதினர். 83 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேர்வுத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாகவும், வினாக்களுக்கு முழுமையாக பதில் அளிக்க நேரம் போதவில்லை என வும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
