ADDED : ஜூன் 26, 2026 11:23 PM
அ நிறம் | அளவு
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் உபகோவிலான அகிலாண்டேஸ்வரி உடனுறை அரசம்பலவாணர் கோவில், பேரூர் படித்துறை செல்லும் வழியில் உள்ளது.
கும்பாபிேஷகத்தையொட்டி நேற்று காலை 4:30 மணிக்கு, நான்காம் கால யாக பூஜை, திருமுறை புறப்பாடு நடந்தது. காலை 6:45 மணிக்கு, செந்தில் ராஜ குருக்கள் தலைமையில், சிவாச்சாரியார்கள், யாகசாலையில் இருந்து ராஜகோபுரம் மற்றும் விமான கோபுரங்களுக்கு, புனிதநீர் கலசங்கள் கொண்டுவரப்பட்டது. காலை 7:00 மணிக்கு, ராஜகோபுரம், விமான கலசங்கள், பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள், அறநிலையத்துறை இணை கமிஷனர் ரமேஷ், பக்தர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர்கள் சம்பத்குமார், விக்னேஷ் சாமி தரிசனம் செய்தனர்.
