/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் நிலங்களை மீட்கணும்; வி.எச்.பி., கூட்டத்தில் தீர்மானம்
/
கோவில் நிலங்களை மீட்கணும்; வி.எச்.பி., கூட்டத்தில் தீர்மானம்
கோவில் நிலங்களை மீட்கணும்; வி.எச்.பி., கூட்டத்தில் தீர்மானம்
கோவில் நிலங்களை மீட்கணும்; வி.எச்.பி., கூட்டத்தில் தீர்மானம்
ADDED : நவ 18, 2025 03:43 AM
பொள்ளாச்சி: ஆக்கிரமிப்பில் உள்ள பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என, தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுக்குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத்தின், கோவை தெற்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம், பொள்ளாச்சி சீதாம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்டச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். முன்னதாக, மாவட்ட தலைவர் மோகனசுந்தரம் வரவேற்றார். மாநில இணை பொதுச் செயலாளர் விஜயகுமார் கலந்து கொண்டார்.
கூட்டத்தில், பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு, அன்ன அபிஷேகம், கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்கள் நடத்த வேண்டும். இக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், அதனை மீட்க ஹிந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வால்பாறையில் வெளிமாநில மக்கள், சட்டத்திற்கு புறம்பாக வசிப்பதால், எஸ்.ஐ.ஆர்., வாக்கு சேர்ப்பு விசாரணையின் போது, அவர்களின் ஓட்டு உரிமையை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதால், போதை பயன்பாட்டு பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

