ADDED : ஆக 12, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கோவை: போத்தனுார் ரயில்வே ஸ்டேஷனில் ‘அம்ரித் பாரத்’ திட்டத்தில் ரூ.144.36 கோடி மதிப்பீட்டில் இரண்டாவது முனையமாக மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, யார்டு, ஸ்டோர் ஷெட், பிட் லைன், டிரிப் ஷெட் உள்ளிட்ட பகுதிகளுக்கான மின் ஒயரிங், மின் வினியோக பணிகளுக்கு ‘டெண்டர்’ வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ரூ.13.52 கோடி மதிப்பில் பணிகள் நடக்க உள்ளன. டெண்டர் இறுதியானவுடன் 12 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும்.
ரயில்களை பராமரிப்பதற்கான ‘சிக் லைன்’ உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படுவதன் மூலம் எதிர்காலத்தில், போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் செயல்பாட்டு திறன் மேலும் அதிகரிக்கும் என்கின்றனர், கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பினர்.
