/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டவாளத்தில் ஆய்வு ரயில் சோதனை ஓட்டம்
/
தண்டவாளத்தில் ஆய்வு ரயில் சோதனை ஓட்டம்
ADDED : நவ 29, 2024 11:34 PM

கிணத்துக்கடவு: ரயில் தண்டவாளத்தின் உறுதித் தன்மையை அறிய, பொள்ளாச்சி -- ஈரோடு வழித்தடத்தில் ரயில் இயக்கி சோதனை செய்யப்பட்டது.
அரசு சார்பில், அடிக்கடி ரயில் மற்றும் தண்டவாளங்கள், வேகமாக செல்வதால் ஏற்படும் இடர்பாடுகள் உள்ளிட்டவைகளை அறிய அவ்வப்போது ரயில் வழித்தடத்தில், சோதனை ஓட்டம் நடத்துவது வழக்கம். இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி --- ஈரோடு வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.
இதில், ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்ய, ஆர்.டி.எஸ்.ஓ., அமைப்பின் வாயிலாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் மற்றும் ஈரோடு வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடந்தது.
ரயில் தண்டவாளத்தின் உறுதி தன்மை மற்றும் தண்டவாளத்தில் அதிர்வு ஏற்படும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டது. இதற்காக, இந்த வழித்தடத்தில் நான்கு பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கப்பட்டது.