/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டி: மாணவியருக்கு பரிசு
/
பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டி: மாணவியருக்கு பரிசு
பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டி: மாணவியருக்கு பரிசு
பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டி: மாணவியருக்கு பரிசு
ADDED : ஜன 26, 2024 12:55 AM
மேட்டுப்பாளையம்;காரமடை ராமானுஜர் கூடத்தில், எஸ்.வி.டி., பசுமை அறக்கட்டளை சார்பில், மாணவ, மாணவியருக்கு பாசுரங்களை கற்றுக் கொடுக்கும் வகுப்பு நடந்தது. 20க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, 30 நாட்கள் பாசுரங்கள் சொல்லி கொடுக்கப்பட்டது.
அறக்கட்டளையின், 224வது வார ஆன்மீக சொற்பொழிவு விழாவில் பாசுரங்கள் ஒப்புவித்தல் போட்டி அரங்கநாதர் கோவிலில் நடந்தது.
சுதர்சன பட்டர், திலகவதி, ஜெயமணி ஆகியோர் போட்டி நடுவர்களாக இருந்தனர்.
முதல் இரண்டு இடங்கள் பிடித்த, வித்ய விகாஸ் பள்ளி மாணவியர் சுபஸ்ரீ, வித்யா, மூன்றாம் இடம் பிடித்த எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி மாணவி சவிதா ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்றவர்களுக்கு ஆறுதல் பரிசும், சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகி சக்திவேல் செய்திருந்தார்.