/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மே முதல் வாரத்தில் பாடநுால்கள் தயார் பள்ளி திறக்கும் நாளில் வழங்க திட்டம்
/
மே முதல் வாரத்தில் பாடநுால்கள் தயார் பள்ளி திறக்கும் நாளில் வழங்க திட்டம்
மே முதல் வாரத்தில் பாடநுால்கள் தயார் பள்ளி திறக்கும் நாளில் வழங்க திட்டம்
மே முதல் வாரத்தில் பாடநுால்கள் தயார் பள்ளி திறக்கும் நாளில் வழங்க திட்டம்
ADDED : ஏப் 21, 2025 09:25 PM
- நமது நிருபர் -
மே முதல் வாரத்துக்குள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கான புத்தகங்களும் மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விடும் என, கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வுகளும், இம்மாதம் 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் நடந்தன. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முழுஆண்டு தேர்வு நிறைவு பெற்றது.
ஆறு முதல் 8 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 24ம் தேதி தேர்வு நடக்கிறது. 25ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. ஆசிரியர்கள் ஏப்., 30 வரை பணிபுரிய வேண்டும்.
இந்நிலையில், அடுத்த கல்வியாண்டுக்கான பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை மேற்கொண்டது.
அவ்வகையில்,நடப்பு கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், 2025 - 2026 ம் கல்வியாண்டுக்கான பாடநுால் வினியோகத்துக்கு, பாடநுால் கழகம் முன்கூட்டியே தயாராகி விட்டது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, தமிழ்நாடு பாடநுால் கல்வியியல் பணிகள் கழகம் வாயிலாக, மாநிலம் முழுதும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பள்ளி பாடப்புத்தகங்கள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு மையத்துக்கு எட்டாம் வகுப்பு பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அலுவலர்கள் கூறுகையில், 'அனைத்து பிரிவுக்கான புத்தகங்கள் அச்சிடும் பணி முன்கூட்டியே முடிந்து விட்டது. நடப்பாண்டு (2025 - 26) வழங்கப்பட உள்ள பாடப்புத்தகம், பாடங்களில் மாற்றமில்லை.
தயாராக உள்ள எட்டாம் வகுப்பு புதிய பாடப்புத்தகம், மாவட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மே முதல் வாரத்துக்குள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு, நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிக்கான புத்தகங்களும் அனுப்பி வைக்கப்பட்டு விடும்.
ஜூன் முதல் வாரம் பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு வினியோகிக்கப்படும்,' என்றனர்.