/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குருந்தமலையில் 11ல் தைப்பூச தேரோட்டம்
/
குருந்தமலையில் 11ல் தைப்பூச தேரோட்டம்
ADDED : ஜன 31, 2025 11:57 PM
மேட்டுப்பாளையம்; காரமடை அருகே குருந்தமலையில், தைப்பூச தேர்த்திருவிழா வருகிற, 4ம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது. ஐந்தாம் தேதி காலை யாகசாலை வேள்வி பூஜையும், அதைத் தொடர்ந்து, 11:30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெற உள்ளது.
பத்தாம் தேதி காலை திருக்கல்யாண உற்சவமும், இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 11ம் தேதி மாலை வள்ளி தெய்வானை சமேதராக குழந்தை வேலாயுதசுவாமி, தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 5:00 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது.
14ம் தேதி கொடி இறக்கமும், மதியம் சந்தன காப்பு உற்சவம் பூர்த்தியும் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகனப்பிரியா, அறங்காவலர்கள் குழந்தைவேலு, சாவித்திரி, சுரேஷ்குமார், முருகன், செயல் அலுவலர் வனிதா ஆகியோர் செய்து வருகின்றனர்.