UPDATED : அக் 06, 2026 11:20 PM
ADDED : அக் 06, 2026 08:00 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலணி தம்பு மேல்நிலைப் பள்ளியில், 57வது ஆண்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் ரமேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளி செயலாளர் பிரீத்தா பிரியதர்ஷினி சிறப்புரையாற்றினார்.
தன்னம்பிக்கை பேச்சாளர் கவிதாசன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், கல்வி என்பது சமூகத்திற்கு பயன்படும் வகையில் இருத்தல் வேண்டும். நன்னடத்தையும், தனி மனித ஒழுக்கமும், வாழ்க்கையின் வெற்றியை தீர்மானிக்கிறது என்றார். தொடர்ந்து, 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கும், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, 'இந்திய விழாக்கள்' என்ற தலைப்பில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளியின் நிர்வாகத்தினர் மற்றும் கல்வி இயக்குனர் குணசேகர், உதவி தலைமை ஆசிரியர்கள், பிரியா, மாடசாமி, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
