/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அ.தி.மு.க., துவங்கிய நீர்மோர் பந்தலால் ஆகா
/
அ.தி.மு.க., துவங்கிய நீர்மோர் பந்தலால் ஆகா
ADDED : ஏப் 09, 2025 06:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டாமுத்தூர்; தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை பஸ் ஸ்டாண்டில், அ.தி.மு.க., சார்பில், நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுமணி, நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். தொண்டாமுத்தூர் முன்னாள் யூனியன் சேர்மன் மதுமதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதே போல கட்சியின் சார்பில், கோவையின் பல்வேறு இடங்களிலும், நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் தவிக்கும் மக்களுக்கு, இந்த நீர்மோர் பந்தல்கள் பெரிய ஆசுவாசமாக உள்ளன.