தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு... அறிவிப்பு வந்தாச்சு ! நெல் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு... அறிவிப்பு வந்தாச்சு ! நெல் விவசாயிகள் பயன்பெற அழைப்பு

குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்துக்கு... அறிவிப்பு வந்தாச்சு ! நெல் விவசாயிகள் பயன்பெற அழைப்பு


UPDATED : ஜூன் 21, 2026 04:45 PM

ADDED : ஜூன் 21, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 21, 2026 04:45 PM ADDED : ஜூன் 21, 2026 04:40 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆனைமலை: 'ஆனைமலை வட்டாரத்தில், நெல்சாகுபடி விவசாயிகள், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்,' என, வேளாண்மை இணை இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.

பொள்ளாச்சி அருகே, ஆழியாறு அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. ஆழியாறு பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு, காரப்பட்டி, அரியாபுரம், பள்ளிவளங்கல், வடக்கலுார், பெரியணை மற்றும் அம்மன் கால்வாய் வழியாக நீர் வினியோகிக்கப்படுகிறது.

பழைய ஆயக்கட்டு பாசனத்தில் இரு பருவங்களாக நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதில், 6,400 ஏக்கர் நிலங்களுக்கு முதல் போக பாசனத்துக்காக மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வரும், அக்., 15ம் தேதி வரை, 152 நாட்களுக்கு, 1,205 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இதை பயன்படுத்தி விவசாயிகள் முதல் போக சாகுபடி மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன்பெறலாம், என, வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி தெரிவித்தார்.

வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி அறிக்கை வருமாறு:

தமிழகத்தில், டெல்டா அல்லாத மாவட்டங்களிலும் நடப்பாண்டில் நெல் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் விரிவுப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இயந்திர நடவு அல்லது நேரடி நெல்விதைப்பின் வாயிலாக நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மானியமும், விதை நெல் மானிய விலையிலும், திரவ உயிர் உரம் ஏக்கருக்கு ஒரு லிட்டர் மற்றும் நெல் நுண்ணுாட்டம் ஐந்து கிலோ மானியத்தில் சிறப்பு தொகுப்பாக வழங்கப்படுகிறது.

ஆனைமலை வட்டாரத்துக்கு இயந்திர நடவு இலக்கு, 60 ஏக்கர் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள விவசாயிகள், ஆனைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொள்ள வேண்டும்.

மேலும், குறுகிய கால நெல் ரகமான, 'கோ 55' நெல் ரகம் சாகுபடி செய்தால், இப்பருவத்தில் தோன்றும் பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களை தாங்கி வளரும்.

ஆனைமலை வட்டார விவசாயிகள், இந்த சிறப்பு திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள, வட்டார வேளாண் விரிவாக்க களப்பணியாளர்களை தொடர்பு கொண்டு பதிவு செய்ய வேண்டும். மேலும், விபரங்களுக்கு ஆனைமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us