/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆருத்ரா தரிசனம் விழா வரும் 13ல் நடக்கிறது
/
ஆருத்ரா தரிசனம் விழா வரும் 13ல் நடக்கிறது
ADDED : ஜன 08, 2025 11:01 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி, ;பொள்ளாச்சி அருகே தேவணாம்பாளையம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அம்மணீஸ்வர சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன மஹோற்சவ விழா வரும், 13ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி வரும், 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு ஆருத்ரா அபிேஷகம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
வரும், 13ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண சீர் வரிசை கொண்டு வருதல், காலை, 5:00 மணிக்கு கோ மாதா பூஜை, காலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. காலை, 7:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதில், தேவணாம்பாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து மக்கள் கலந்து கொள்கின்றனர்.