/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பத்து ஏக்கர் குளத்திற்கு அத்திக்கடவு நீர் வரலே
/
பத்து ஏக்கர் குளத்திற்கு அத்திக்கடவு நீர் வரலே
ADDED : டிச 26, 2024 11:27 PM

அன்னுார்; சொக்கம்பாளையத்தில் உள்ள பத்து ஏக்கர் குளத்தில், ஒரு சொட்டு கூட அத்திக்கடவு திட்ட தண்ணீர் வரவில்லை.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 1045 குளம், குட்டைகள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்டில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் இதுவரை சொக்கம்பாளையம் குளத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை.
இதுகுறித்து அத்துக்கடவு ஆர்வலர்கள் கூறுகையில், '1,912 கோடி ரூபாயில் இத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திட்டத்தை நிறைவேற்றிய நிறுவனமே ஐந்தாண்டுகளுக்கு பராமரிக்க வேண்டும். ஆனால் பராமரிப்பு பணியில் கடும் மெத்தனம் நிலவுகிறது. 2023 பிப்., முதல் ஒன்றரை ஆண்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டத்தின் போதும் சொக்கம்பாளையத்தில் உள்ள 10 ஏக்கர் பரப்பளவு உள்ள குளத்திற்கு தண்ணீர் வரவில்லை. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது.
இது குறித்து அன்னுாரில் உள்ள அத்திக்கடவு நீரேற்று நிலை அலுவலகத்திலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இங்கு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் மாணவ மாணவியருக்கு ஐந்து விடுதிகள் உள்ளன. குளத்தில் நீர் தேங்கினால் இப்பகுதியில் போர்வெல் நீர்மட்டம் உயரும். அருகில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.
ஆனால் இதுவரை அத்திக்கடவு திட்டத்தில் இங்கு தண்ணீர் விடவில்லை. விரைவில் விடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.