/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறையில் நிலவும் கடுங்குளிர்
/
வால்பாறையில் நிலவும் கடுங்குளிர்
ADDED : டிச 22, 2025 05:19 AM
வால்பாறை: வால்பாறையில் நிலவும் கடுங்குளிரால், சுற்றுலாபயணியர் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்து செல்கின்றனர்.
அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், டைகர் பால்ஸ், சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, கவர்க்கல் வீயூ பாய்ண்ட், நல்லமுடி காட்சிமுனை, சோலையாறு அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாஸ்தலங்களை, சுற்றுலாபயணியர் கண்டு ரசிக்கின்றனர்.
இந்நிலையில், பருவ மழைக்கு பின் வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் காலை, மாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவும், இரவு நேரத்தில் கடுங்குளிரும் நிலவுகிறது.
இதனால் குழந்தைகள் முதல் முதியவர் வரை, பாதுகாப்பான உடைகளை அணிந்து, வெளியில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் உள்ளூர் மக்களும், சுற்றுலாபயணியரும் கடுங்குளிரால் தவிக்கின்றனர்.
இந்நிலையில், வால்பாறையில் குளிர் அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக அவர்கள் வருகையும் குறைந்துள்ளது. இதனால் வால்பாறையில் உள்ள சுற்றுலாஸ்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.

