/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பா.ஜ., அரசு தமிழகத்துக்கு நிறைய உதவி செய்துள்ளது'
/
'பா.ஜ., அரசு தமிழகத்துக்கு நிறைய உதவி செய்துள்ளது'
'பா.ஜ., அரசு தமிழகத்துக்கு நிறைய உதவி செய்துள்ளது'
'பா.ஜ., அரசு தமிழகத்துக்கு நிறைய உதவி செய்துள்ளது'
ADDED : ஆக 17, 2025 10:50 PM

தொண்டாமுத்தூர்; அ.தி.மு.க., சார்பில், சட்டசபை தேர்தலையொட்டி, திண்ணை பிரசாரம் தொண்டாமுத்தூரில் நடந்தது. முன்னாள் அமைச்சர் வேலுமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முன்னதாக, தொண்டாமுத்தூர் மாரியம்மன் கோவிலில், சுவாமி தரிசனம் செய்து, பிரசாரத்தை துவங்கினார். சாலையோர கடைகளுக்கு சென்று, அ.தி.மு.க., ஆட்சியில் செய்த சாதனைகள் குறித்து விளக்கினார். தற்போது தி.மு.க., ஆட்சியில் நடந்துவரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை, வரி உயர்வு உள்ளிட்டவை அடங்கிய நோட்டீஸ் வினியோகித்தார்.
தொடர்ந்து, திருவள்ளுவர் வீதியில் நடந்த திண்ணை பிரசாரத்தில் வேலுமணி பேசுகையில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்து கொடுத்தோம். அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி அமைந்ததும் தி.மு.க.,வுக்கு பயம் வந்துவிட்டது.
பா.ஜ., அரசு, தமிழகத்துக்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளது. தி.மு.க., மக்கள் விரோத அரசாகவே செயல்படுகிறது. வரி உயர்வு, விலைவாசி உயர்வு...இப்படி பல சொல்லலாம். போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. கொலை, கொள்ளை, போதைப்பொருள் புழக்கம் எங்கும் அதிகமாக உள்ளது, என்றார்.