/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில் மோதி இரண்டு துண்டான வாலிபர் உடல்; 2 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு
/
ரயில் மோதி இரண்டு துண்டான வாலிபர் உடல்; 2 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு
ரயில் மோதி இரண்டு துண்டான வாலிபர் உடல்; 2 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு
ரயில் மோதி இரண்டு துண்டான வாலிபர் உடல்; 2 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு
ADDED : நவ 01, 2024 10:27 PM
கோவை ; ரயில் மோதி இரண்டு துண்டான வாலிபர் உடல், 2 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம் - டெல்லி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் அதிகாலை கோவை அருகே வந்து கொண்டிருந்தது. அந்த ரயில் பீளமேடு டைடல் பார்க் அருகே வந்த போது திடீரென, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த ரயில் வாலிபர் மீது மோதி அவரது உடல் இரண்டு துண்டுகளாக சிதறியது. இதில் இடுப்பின் மேற்பகுதி ரயில் இஞ்சினில் மாட்டி கொண்டது.
வாலிபர் உடல் ரயிலில் மாட்டியது தெரியாமல் இஞ்சின் டிரைவர் ரயிலை தொடர்ந்து இயக்கினார். இதனால் அந்த வாலிபர் உடல் 2 கி.மீ., துாரம் இழுத்து செல்லப்பட்டது. ராமானுஜம் நகர் அருகே ரயில் செல்லும் போது வாலிபர் உடல் இஞ்சின் பகுதியில் தொங்குவதை டிரைவர் பார்த்தார். உடனே அவர் ரயிலை நிறுத்தி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இஞ்சின் பகுதியில் சிக்கியிருந்த வாலிபர் உடலை மீட்டனர்.
அதன் பின் பீளமேடு பகுதியில் இருந்த மீதி உடலையும் கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் அந்த வாலிபர் கருப்பு நிற பனியன், நீல நிற பேண்ட் அணிந்திருந்ததும், பாக்கெட்டில் சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த பஸ் டிக்கெட்டும், சுக்குநுாறாக உடைந்திருந்த ஐபோனும் கண்டு பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த வாலிபர் உடல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவத்தால், 30 நிமிடம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.