/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் விபத்து தவிர்க்க பாலத்தை உயர்த்தணும்!
/
ரோட்டில் விபத்து தவிர்க்க பாலத்தை உயர்த்தணும்!
ADDED : மே 18, 2025 10:46 PM

வால்பாறை; வால்பாறை அருகே, விபத்தை தவிர்க்க தரைமட்ட பாலத்தை உயர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆழியாறு முதல் வால்பாறை வரையிலான மலைப்பாதையில், பல்வேறு இடங்களில் தரைமட்ட பாலம் உயர்த்தப்படாமல் உள்ளது.இதனால் குறுகலான பாலத்தில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள்அடிக்கடி விபத்துக்கு உள்ளாகின்றன.
மேலும், குறுகலான பாலத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வாகனங்கள் செல்ல முடியாமலும், எதிரே வரும் வாகனத்துக்கு வழி விட முடியாமலும், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
குறிப்பாக, ரொட்டிக்கடை பாலம் மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இதனால் இந்த ரோட்டில் மழை காலங்களில் பாலத்தில், மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே, வால்பாறை - ஆழியாறு ரோட்டில் விபத்துகளை தவிர்க்க, ரொட்டிக்கடை பகுதியில் உள்ள குறுகலான தரைமட்ட பாலத்தை உயர்த்த, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.