/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே 'கேக்' வெட்ட முடியும்!
/
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே 'கேக்' வெட்ட முடியும்!
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே 'கேக்' வெட்ட முடியும்!
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே 'கேக்' வெட்ட முடியும்!
ADDED : மார் 02, 2024 12:56 AM
கோவை:மேட்டுப்பாளையம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் கடந்த பிப்., 29ம் தேதி 18 குழந்தைகள் பிறந்தன. லீப் வருடத்தில் பிறந்ததால், இவர்கள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே, பிறந்த தினத்தை கொண்டாட முடியும்.
ஓராண்டு என்பது பூமி, சூரியனை சுற்றிவரும் நாட்களை கணக்கிட்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, பூமி, சூரியனை சுற்றிவர, 365 நாட்கள், ஐந்து மணி நேரம், 59 நிமிடங்கள், 16 நொடிகள் ஆகிறது.
ஆனால், தற்போதைய காலண்டரில், ஆண்டுக்கு 365 நாட்கள் கணக்கிடப்படுகிறது. மீதமுள்ள நேரம் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒரு நாளாக கணக்கிடப்பட்டு, பிப்., மாதத்தில் சேர்க்கப்படுகிறது. இது 'லீப்' ஆண்டு என அழைக்கப்படுகிறது. லீப் ஆண்டில், பிப்., மாதம், 29 நாட்கள் இருக்கும்.
இதனால், பிப்., 29ம் தேதி பிறக்கும் குழந்தைகளால், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பிறந்த தினம் கொண்டாட முடியும். நடப்பாண்டு லீப் ஆண்டு. பிப்., 29ம் தேதியான நேற்று முன்தினம், கோவை அரசு மருத்துவமனையில், ஆறு ஆண், 10 பெண் என, 16 குழந்தைகள் பிறந்தன.
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரண்டு குழந்தைகள் பிறந்தன.
இவர்கள் 18 பேரும், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறையே, பிறந்த தினம் கொண்டாட முடியும். மற்ற ஆண்டுகளில், தமிழ் மாதத்தின் அடிப்படையில் தங்களது பிறந்த தினத்தை கொண்டாடலாம்.

