ADDED : ஆக 22, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
கோவை: மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி கடந்த 1ம் தேதி துவங்கியது. இப்பணியில் 3,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மண்டல வாரியாக உதவி எண் வழங்கப்பட்டது.
மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாநகராட்சி பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் விரைந்து எடுக்கப்படும். இதுவரை விடுபட்ட மக்கள், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில் இயங்கும் 89259 75974, 89258 40952 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு உதவி கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளது .
