/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
10 மாதங்களாக முடங்கி கிடக்கும் சென்னை - புதுச்சேரி சரக்கு கப்பல்
/
10 மாதங்களாக முடங்கி கிடக்கும் சென்னை - புதுச்சேரி சரக்கு கப்பல்
10 மாதங்களாக முடங்கி கிடக்கும் சென்னை - புதுச்சேரி சரக்கு கப்பல்
10 மாதங்களாக முடங்கி கிடக்கும் சென்னை - புதுச்சேரி சரக்கு கப்பல்
ADDED : செப் 21, 2024 03:52 AM

சென்னை: சென்னை - புதுச்சேரி சரக்கு கப்பல் சேவை, 10 மாதங்களுக்கு மேலாக முடங்கி உள்ளது.
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தில், சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு, சிறிய சரக்கு போக்குவரத்து சேவை, கடந்த ஆண்டு பிப்., 27ல் துவங்கப்பட்டது. 'குளோபல் லாஜிஸ்டிக் சொலியூஷன்' நிறுவனத்தின், 'ஹோப் - 7' என்ற சிறிய ரக கப்பல் இயக்கப்பட்டது. இது, ஒரே நேரத்தில், 106 சரக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லும் திறன் உடையது. வாரத்தில் இரு நாட்கள், சென்னை - புதுச்சேரி இடையே இயக்கப்பட்டு வந்தது.
மாதத்தில், 1,200 'கன்டெய்னர்'கள் வரை ஏற்றிச் செல்ல முடியும்; 12 மணி நேரத்தில் புதுச்சேரி செல்லும். இந்த சரக்கு கப்பலில், கடந்த ஆண்டு நவம்பரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அது சரிசெய்யப்படாமல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 10 மாதங்களை கடந்த பின்னும், இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை.
இதுகுறித்து, தொழில்முனைவோர் சிலர் கூறியதாவது:
இந்த சரக்கு கப்பல் சேவை, திருச்சி, சேலம், நாமக்கல்லில் உள்ள தொழிற்சாலைகள் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வாய்ப்பாக இருந்தது. இக்கப்பல் சேவை, திடீரென 10 மாதங்களாக முடங்கி உள்ளது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
துறைமுக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சரக்கு கப்பல் சேதமடைந்துள்ளதால், புதுச்சேரியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதை சரிசெய்து இயக்குமாறு, கப்பல் நிறுவனத்துக்கும், கப்பலை இயக்கும் ஒப்பந்ததாரருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கும்' என்றனர்.