/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை தொழிலாளர்களிடம் குறை கேட்க பட்டறைக்கு நேரில் சென்ற முதல்வர்
/
நகை தொழிலாளர்களிடம் குறை கேட்க பட்டறைக்கு நேரில் சென்ற முதல்வர்
நகை தொழிலாளர்களிடம் குறை கேட்க பட்டறைக்கு நேரில் சென்ற முதல்வர்
நகை தொழிலாளர்களிடம் குறை கேட்க பட்டறைக்கு நேரில் சென்ற முதல்வர்
ADDED : நவ 06, 2024 03:14 AM

கோவை; கோவையில் தங்க நகை தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கெம்பட்டிகாலனிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், பட்டறையில் அமர்ந்து குறைகேட்டார்.
கோவையில் தங்கநகை தொழிலாளர்கள் இரண்டு லட்சம் பேர் உள்ளனர். இவர்கள் உக்கடம், காந்திபார்க், தடாகம்சாலை, பூமார்க்கெட் பகுதிகளில் தங்க ஆபரணங்களை தயாரித்து வருகின்றனர்.
ஆர்டர்களுக்கு தகுந்தாற்போல் தொழிலாளர்கள் உற்பத்தி செய்து கொடுக்க முடிவதில்லை. அதற்கேற்ப தொழில்நுட்ப வசதி போதுமானதாக இல்லை. எனவே, ஒருங்கிணைந்த தங்கநகை தொழிற்சாலை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று பொற்கொல்லர்கள், நீண்ட காலமாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கோவை வந்த முதல்வர் ஸ்டாலின் உக்கடம் கெம்பட்டி காலனி, தர்மா ராஜகோவில் வீதியில் உள்ள நடராஜன் என்பவருக்கு சொந்தமான தங்க நகை தயாரிக்கும் பட்டறைக்கு சென்றார். அவருடன் அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் முருகானந்தம், கோவை கலெக்டர் கிராந்திகுமார் ஆகியோரும் சென்றனர்.
பட்டறையில் அமர்ந்து தங்கநகை தொழிலாளர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அவர்களுக்கு தேவையான வசதிகள் என்ன, ஒருங்கிணைந்த தங்கநகை பூங்கா அமைப்பதால் ஏற்படும் முன்னேற்றம் மற்றும் வசதி குறித்து கேட்டறிந்தார்.
அப்போது ஒருங்கிணைந்த நகைத்தொழில் வளாகம், என்.ஏ.பி.எல்., டெஸ்டிங் லேப், நகைப்பட்டறைகளுக்கு 1,000 யூனிட் மின்மானியம், தங்க நகை தொழிலாளர்களுக்கென்று தனி வாரியம், பிணையில்லா வங்கிக்கடன், கோவையில் தயாரிக்கும் நகைக்கென்று காப்புரிமை உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
பெற்றுக்கொண்ட முதல்வர் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.