/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிகாரர்களுக்கு இலவச 'பார்' ; பேரூராட்சி நிர்வாகம் தாராளம்
/
குடிகாரர்களுக்கு இலவச 'பார்' ; பேரூராட்சி நிர்வாகம் தாராளம்
குடிகாரர்களுக்கு இலவச 'பார்' ; பேரூராட்சி நிர்வாகம் தாராளம்
குடிகாரர்களுக்கு இலவச 'பார்' ; பேரூராட்சி நிர்வாகம் தாராளம்
ADDED : அக் 07, 2025 11:28 PM

தொண்டாமுத்துார் ; பூலுவபட்டியில், பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே, 2004ல் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. இப்பகுதி மக்கள், குறைந்த கட்டணத்தில், தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்தி வந்தனர். கட்டடம் சிதிலம் அடைந்ததால், 2021ல் 40 லட்சம் ரூபாயில் சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் திட்டமிட்டு, டெண்டர் விடப்பட்டது.
சமுதாயக்கூடம் சீரமைப்பு பணி, விறுவிறுப்பாக நடந்து வந்தது. 60 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள பணிகள் நிறுத்தப்பட்டன. நான்கு ஆண்டுகளாக பணிகள் செய்யாததால், சமுதாயக்கூடம் புதர் மண்டி உள்ளது. தற்போது, 'குடி'மகன்கள் தங்களின் கூடாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
ஏழை மக்களுக்கு பயன்படும் சமுதாயக்கூடத்தை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதை, பேரூராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது.
பொதுமக்கள், தங்களின் வீட்டு விசேஷங்களை, அதிக கட்டணத்தில் தனியார் மண்டபங்களில் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாதியில் விடப்பட்டுள்ள சமுதாயக்கூட பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், என, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பூலுவபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தர்ராஜிடம் கேட்டபோது, ''சமுதாயக்கூட பணிகளை பாதியில் நிறுத்தியதால், அப் பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பணிகளுடன் புதுப்பிக்க, புதிய டெண்டர் விட திட்டமிட்டு உள்ளோம்,'' என்றார்.