sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பரிதாப நிலையில் கோவைப்புதுார் பஸ் நிறுத்தம்; சேறும் சகதியுமாக, புதர் மண்டி காணப்படும் அவலம்

/

பரிதாப நிலையில் கோவைப்புதுார் பஸ் நிறுத்தம்; சேறும் சகதியுமாக, புதர் மண்டி காணப்படும் அவலம்

பரிதாப நிலையில் கோவைப்புதுார் பஸ் நிறுத்தம்; சேறும் சகதியுமாக, புதர் மண்டி காணப்படும் அவலம்

பரிதாப நிலையில் கோவைப்புதுார் பஸ் நிறுத்தம்; சேறும் சகதியுமாக, புதர் மண்டி காணப்படும் அவலம்


ADDED : மார் 24, 2025 06:10 AM

Google News

ADDED : மார் 24, 2025 06:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிளைகளால் இடையூறு


குனியமுத்துார், பாலக்காடு மெயின் ரோடு, 88வது டிவிஷனுக்கு உட்பட்ட, நெல்லை முத்து விலாஸ் கடை எதிரில், சாலையோரம் மரக்கிளைகள் வெட்டி போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும், வாகனஓட்டிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது.

- விஷ்ணு, குனியமுத்துார்.

தாமத பணியால் அவதி


எஸ்.ஐ.எச்.எஸ்., பாலப் பணி, கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. இப்பகுதி மக்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. விரைந்து பணிகளை முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.

- ராபர்ட், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி.

பஸ் ஸ்டாண்டை காணோம்


கோவைப்புதுார், 91வது வார்டு, கோகுலம் காலனியில், பேரூர் மெயின் ரோடு பேருந்து நிறுத்தத்தில், பேருந்து நிறுத்தம் தெரியாத அளவுக்கு புதர் மண்டி, சேறும் சகதியுமாக காணப்படுகிறது. இருக்கைகள் மண் படிந்தும், பேருந்து நிறுத்த சுவர்களில், போஸ்டர் ஒட்டப்பட்டும் காணப்படுகிறது.

- பாலாஜி, கோவைப்புதுார்.

பல மாதமாகவீணாகும் தண்ணீர்


நேதாஜிபுரம், 56வது வார்டு, எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி சாலையில், டி.என்.எச்.பி.,காலனியின் 'எல்' பிளாக் பகுதியில், உப்பு தண்ணீர் குழாய் உடைந்துள்ளது. இதனால் பல மாதங்களாக தண்ணீர் வீணாகிறது.

- பாலு, நேதாஜிபுரம்.

மூடப்படாத குழி


ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு பகுதிகளில், குடிநீர் குழாய்களுக்காக ரோடு தோண்டப்பட்டது. பணிகள் முடிந்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், குழி மூடவில்லை. இதனால், இப்பகுதியில் பல விபத்து நடக்கிறது. குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

- ராஜா, ராமநாதபுரம்.

பன்றிகளால் தொல்லை


உப்பிலிபாளையம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சுற்றிலும், சாக்கடை கால்வாய்களில் பன்றிகள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. அதிகாலை மற்றும் மாலை வேளையில், சாலையில் ஓடும் பன்றிகளால் விபத்து ஏற்படுகிறது. பன்றிகளால் சுகாதாரமற்ற சூழலும் நிலவுகிறது.

- ஜெயப்பிரகாஷ், கோபாலன்.

நோய் பரவும் முன் நடவடிக்கை


கணபதி, ஆர்.கே.புரம், 19வது வார்டு, சைட் நம்பர் ஐந்தில், கிருஷ்ணா திருமண மண்டபம் ரோட்டில், குடியிருப்பு பகுதியில் குளம் போல சாக்கடை நீர் தேங்கியுள்ளது. கடும் துர்நாற்றமும், கொசுப்புழுக்கள் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சங்கவி, கணபதி.

பள்ளங்களால் விபத்துகள்


கோவில்மேடு முதல் சாய்பாபாகாலனியில், நுாறு மீட்டர் சாலையில் 10க்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளது. சாலையெங்கும் உள்ள பள்ளங்களால், அதிக விபத்துகள் நடக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக புகார் செய்தும், சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

- ராகுல்குமார், கோவில்மேடு.

காத்திருக்கும் கழிவுகள்


குனியமுத்தார், 87வது வார்டு, பிரின்ஸ் அவென்யூ பகுதியில், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து பின்பு, சாலையிலேயே கழிவு போட்டு சென்றுள்ளனர். கடந்த 10 நாட்களாக சாலையோரம் கழிவு மண் குவிந்துள்ளது. வாகனஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது.

- தங்கவேல், குனியமுத்துார்.

ஆக்கிரமிப்பால் நெருக்கடி


வெரைட்டி ஹால் ரோட்டின் இரு புறமும் உள்ள சைக்கிள் கடைகளில், சைக்கிள்களை சாலையோரம் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல், கடைகளின் பொருட்களை சாலையோரம் வைப்பதால், பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த முடியவில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

- திருகாம்பிகை, டவுன்ஹால்.

கடும் துர்நாற்றம்


பி.என்.புதுார், புதுகிணறு ரோடு, பொது கழிப்பிடம் அருகே திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. நாய்கள் கழிவுகளை சாலை முழுவதும் இழுத்து போடுகின்றன. குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொட்டிகள் வைத்து சீரான இடைவெளியில், குப்பையை அகற்ற வேண்டும்.

- கிஷோர்குமார், பி.என்.புதுார்.

திறந்தவெளியில் ஓடும் கழிவுநீர்


சிங்காநல்லுார், ரயில்வே கேட் அருகே, நேதாஜிபுரம், சக்தி நகர் பகுதியில் இருக்கும், அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து, கழிவுநீர் திறந்தவெளியில் வெளியேற்றப்படுகிறது. சுகாதாரமற்ற சூழல் நிலவுவதால் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விஜய், சிங்காநல்லுார்.






      Dinamalar
      Follow us