/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சிப்பள்ளியின் தேவை கேட்டறிந்தார் கமிஷனர்
/
மாநகராட்சிப்பள்ளியின் தேவை கேட்டறிந்தார் கமிஷனர்
ADDED : பிப் 22, 2024 06:08 AM
கோவை: மாநகராட்சி மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், ரூ.7.65 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் வளர்ச்சி திட்ட பணிகளை, கமிஷனர் நேற்று ஆய்வு செய்தார்.
மாநகராட்சி, 83வது வார்டு கடலைக்கார சந்து பகுதியில், 'தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா' தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில், ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் வீடற்ற ஆதரவற்றோர் தங்கு விடுதி கட்டுமான பணி நடந்து வருகிறது.
புலியகுளம் வெரிவாடா மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில், ரூ.25.40 லட்சம் மதிப்பீட்டில் நுாலகம், ஆய்வகம், பள்ளி மேற்கூரை கட்டுமானம் என, பல்வேறு பகுதிகளிலும் ரூ.7.65 கோடி மதிப்பீட்டில் நடந்துவரும் வளர்ச்சி பணிகளை, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று ஆய்வு செய்தார். பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடிய அவர், தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார்.