/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீதிபதி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் முடக்கம்
/
நீதிபதி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் முடக்கம்
நீதிபதி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் முடக்கம்
நீதிபதி அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் முடக்கம்
ADDED : பிப் 15, 2024 06:43 AM
கோவை : கோவையில், நீதிபதிகளுக்கான அடுக்குமாடி குடியிருப்புக்கு, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்வது தாமதம் ஆவதால், கட்டுமான பணி முடங்கி கிடக்கிறது.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மட்டும், 47 நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் நீதிபதிகளுக்கு, ரேஸ்கோர்ஸ் மற்றும் ரெட்பீல்டில், 12 வீடுகள் மட்டுமே அரசால் கட்டப்பட்டு இருந்தது.
மற்ற நீதிபதிகள், நகரிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். அதற்கான வாடகை அரசு தரப்பில் வழங்கப்படுகிறது.
இதனால், கோவையில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகள் வசதிக்காக, ரேஸ்கோர்ஸ் மற்றும் ரெட்பீல்டில், அடுக்குமாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது.
ரேஸ்கோர்சில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த பழைய மாஜிஸ்திரேட் குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, அதே இடத்தில் புதிதாக 16 வீடுகள் கொண்ட மூன்றடுக்கு மாடியும், ரெட்பீல்டில் 14 வீடுகள் கொண்ட அடுக்கு மாடியும் கட்டப்பட்டு வருகின்றன.
இதற்காக, முதல் கட்டமாக 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை வாயிலாக, 2022ல் கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.
கட்டுமான பணிகள் ஓரளவு நிறைவடைந்த நிலையில், உள் அலங்காரம், எலக்ட்ரிக்கல், பிளம்பிங், டைல்ஸ் பதித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை.
கட்டுமான பொருட்களின் கடுமையான விலை உயர்வு காரணமாக, ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால், தொடர்ந்து பணிகள் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால், கூடுதலாக 16.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, பொதுப்பணித்துறையிலிருந்து மதிப்பீடு பெற்று , நீதித்துறை நிர்வாகம் சார்பில், அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், அரசு நிதி ஒதுக்கீடு செய்யாமல் தாமதித்து வருவதால், கட்டுமான பணிகள் பல மாதங்களாக முடங்கி கிடக்கின்றன.

