ADDED : ஜன 05, 2025 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்; நெகமம், எம்மேகவுண்டன்பாளையத்தில் சிதிலமடைந்த நிலையில் உள்ள எரிமேடையை சீரமைக்க வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெகமம், எம்மேகவுண்டம்பாளையத்தில் உள்ள எரிமேடை தற்போது வரை பயன்பாட்டில் உள்ளது. இந்த எரிமேடை மேற்கூரை மற்றும் தூண்கள் என அனைத்தும் சேதமடைந்து பராமரிப்பு இன்றி காணப்படுகிறது.
இதே நிலை தொடர்ந்தால், விரைவில் இடிந்து விழும். இதனால் அப்பகுதி மக்கள் பலர் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், இந்த எரிமேடையை சுற்றிலும் புதர் சூழ்ந்து உள்ளது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில், விரைவில் இந்த எரிமேடையை சீரமைக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.