/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சித்திரம் பேசுதடி' ஓவிய கண்காட்சி கோவை விழாவில் கலையின் கனவு உலகம்
/
'சித்திரம் பேசுதடி' ஓவிய கண்காட்சி கோவை விழாவில் கலையின் கனவு உலகம்
'சித்திரம் பேசுதடி' ஓவிய கண்காட்சி கோவை விழாவில் கலையின் கனவு உலகம்
'சித்திரம் பேசுதடி' ஓவிய கண்காட்சி கோவை விழாவில் கலையின் கனவு உலகம்
ADDED : நவ 23, 2024 11:32 PM

கோவை: கோவை விழாவை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், 'கலையின் கனவு உலகம்' என்ற தலைப்பில் 'சித்திரம் பேசுதடி' என்ற ஓவியக் கண்காட்சி, லட்சுமி மில்ஸ் லுாலுா மால் வளாகத்தில் நேற்று துவங்கியது.இந்த கண்காட்சியை ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார்.கண்காட்சியில் இந்தியா முழுவதும் இருந்து, 16 முன்னணி ஓவியக் கலைஞர்கள் வெவ்வேறு பாணிகளில் வரைந்துள்ள படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இதில் நாட்டுப்புற ஓவியங்கள், பழங்குடியினர் ஓவியங்கள் மற்றும் சுவர் ஓவியங்கள் என, பல கலைப்பாணில் ஓவியங்கள் இடம் பெற்று இருந்தன. பீஹார் மதுபானி கோட்னா ஓவியம், மேற்கு வங்க சித்ரா காளிகாட் ஓவியம், மத்தியப்பிரதேசம் கோண்ட் ஓவியம், ஆந்திர பிரதேசம் கலம்காரி ஓவியம், ஒடிசா சவுரா ஓவியம், குஜராத் பித்தோரா மதானி பச்சேடி ஓவியம், -ஹிமாச்சல பிரதேசம் காங்க்ரா ஓவியம் என, பல வண்ண ஓவியங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஓவிய பிரியர்கள் ஏராளமானவர்கள், இந்த கண்காட்சியை பார்வையிட்டனர். பார்வையாளர்கள் பலருக்கும் ஓவியம் வரைய கற்றுக்கொடுக்கப்பட்டது. பிடித்த ஓவியங்களை பார்வையாளர்கள் வாங்கி சென்றனர்.