/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேர்தல் முடிஞ்சாச்சு... ஆட்சியும் அமைஞ்சாச்சு; ஊழியர்களுக்கு மதிப்பூதியம் தர மறந்து போச்சு!
/
தேர்தல் முடிஞ்சாச்சு... ஆட்சியும் அமைஞ்சாச்சு; ஊழியர்களுக்கு மதிப்பூதியம் தர மறந்து போச்சு!
தேர்தல் முடிஞ்சாச்சு... ஆட்சியும் அமைஞ்சாச்சு; ஊழியர்களுக்கு மதிப்பூதியம் தர மறந்து போச்சு!
தேர்தல் முடிஞ்சாச்சு... ஆட்சியும் அமைஞ்சாச்சு; ஊழியர்களுக்கு மதிப்பூதியம் தர மறந்து போச்சு!
ADDED : அக் 19, 2024 06:36 AM

கோவை : லோக்சபா தேர்தல் முடிந்து நான்கரை மாதங்களாகியும், தேர்தல் பணியில் ஈடுபட்டோருக்கு இன்னும் மதிப்பூதியம் வழங்காததால், தீபாவளி பண்டிகைக்கு முன் கிடைக்குமா என்கிற ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.
கடந்த லோக்சபா தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து, ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை பல்வேறு கட்டமாக, தேர்தல் பணிகளை அரசு அலுவலர்கள், பல்வேறு பணிகளை மேற்கொண்டனர்.
இதில், ஓட்டுப்பதிவு அன்றும், ஓட்டு எண்ணிக்கை அன்றும் பணிபுரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு, அன்றைய தினமே சிறப்பூதியம் வழங்கப்பட்டது.
ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, தேர்தல் நடவடிக்கை முடியும் நாள் வரை பணிபுரிந்த மற்ற அலுவலர்களுக்கு, வழக்கமாக வழங்கப்படும் மதிப்பூதியம் இன்னும் வழங்கப்படவில்லை.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை, ஜூன் 4ல் முடிந்தது; நான்கரை மாதங்களாகி விட்டது. தேர்தல் பணியில் ஈடுபட்டோருக்கு எவ்வளவு ரூபாய் மதிப்பூதியம் வழங்க வேண்டும் என 'கிரேடு' வாரியாக தொகை நிர்ணயம் செய்து, இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.
அலுவலக உதவியாளர் முதல் இளநிலை உதவியாளர், பதிவுரு எழுத்தர், கண்காணிப்பாளர், தாசில்தார், சப்-கலெக்டர், டி.ஆர்.ஓ., மற்றும் கலெக்டர் வரை அனைத்து பிரிவு அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் மதிப்புஊதியம் கிடைக்கும்.
மாவட்ட நிர்வாகத்தில் இருந்து, தமிழக தேர்தல் ஆணையத்துக்கு பட்டியல் அனுப்பி விட்டோம். வேறு சில மாவட்டங்களில் இருந்து பட்டியல் அனுப்பாமல் இருப்பதால், தொகை விடுவிக்கப்படவில்லை என்கின்றனர்.
தீபாவளி திருநாளுக்கு முன்னதாக வழங்கினால், பண்டிகை செலவுக்கு பயனுள்ளதாக இருக்கும்' என்றனர்.