/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்க்கரை டப்பாவை தூக்கி சென்ற யானை
/
சர்க்கரை டப்பாவை தூக்கி சென்ற யானை
ADDED : டிச 27, 2025 05:20 AM

பெ.நா.பாளையம்: சின்னதடாகம் வட்டாரத்தில் தொடர்ந்து விவசாயிகளை அச்சுறுத்தி வரும் 'வேட்டையன்' என்ற காட்டு யானையை இடமாற்றம் செய்ய வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வேட்டையன் என்ற காட்டு யானை, சின்னதடாகம் வட்டாரத்தில் தொடர்ந்து பயிர் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று துடியலூர் அருகே பன்னீர்மடை விவசாயி ஆனந்தகுமார் தோட்டத்தில் புகுந்த வேட்டையன் யானை, வீட்டின் முன் பக்க கதவை தள்ளி திறந்து, வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை வெளியே எடுத்து போட்டு சேதப்படுத்தியது. பின்னர், சர்க்கரை டப்பாவை எடுத்துச் சென்ற யானை, அதை சுவைத்தபடியே ரோட்டுக்கு சென்றது.
விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் வந்து யானையை மலையடிவாரத்துக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பின்னர் காட்டு யானை அங்கிருந்து அகன்றது. இதேபோல தாளியூர் விவசாயி வேலுச்சாமி வீட்டின் முன்புற இரும்பு கேட்டை வளைத்து, உடைத்து உள்ளே சென்றது. கால்நடை தீவனங்களை சேதப் படுத்தியது.

