UPDATED : அக் 26, 2026 09:44 PM
ADDED : அக் 26, 2026 08:11 PM

சூலுார்: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நிறுவன நாளை ஒட்டி, செஞ்சேரிமலையில், தொண்டர்களின் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., கந்தசாமி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பொதுக்கூட்டத்தில் மாவட்ட தலைவர் கார்மேகம் தலைமை வகித்தார்.
மாநில இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் பேசியதாவது:
ஆங்கிலேயர்கள் காலம் முதல் இன்று வரை பல தடைகளை இயக்கம் சந்தித்துள்ளது. கோர்ட் வாயிலாக சட்டபூர்வமாக நம் உரிமையை பெற்றுள்ளோம்.
வரும், 2047ல் நம் நாடு உலகின் வல்லரசாக, இந்துக்கள் ஒன்றுபட வேண்டும். அதற்கு, ஏற்றத்தாழ்வு இல்லாத இந்து சமுதாயமாக மாற வேண்டும். உள்நாட்டு பொருட்களை பயன்படுத்த வேண்டும். தாய்மொழி பற்று இருக்க வேண்டும். பிறமொழி வெறுப்பு இருக்க கூடாது. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டும். குடும்ப அமைப்பை முறையை பாதுகாக்க வேண்டும். குடிமக்களின் கடமைகளை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார். செஞ்சேரிமலை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் கதிரேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
