/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெற்றி முனைப்புடன் வீரர்கள் களம்; கபடி போட்டியில் துடிப்பான ஆட்டம்
/
வெற்றி முனைப்புடன் வீரர்கள் களம்; கபடி போட்டியில் துடிப்பான ஆட்டம்
வெற்றி முனைப்புடன் வீரர்கள் களம்; கபடி போட்டியில் துடிப்பான ஆட்டம்
வெற்றி முனைப்புடன் வீரர்கள் களம்; கபடி போட்டியில் துடிப்பான ஆட்டம்
ADDED : அக் 16, 2024 09:22 PM

கோவை : அண்ணா பல்கலை, 9வது மண்டல கபடி போட்டியில், கல்லுாரி மாணவர்கள் வெற்றி முனைப்புடன் முழு திறமையையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையே, ஆண்களுக்கான கபடி போட்டிகள்(9வது மண்டலம்), சுகுணா இன்ஜி., கல்லுாரியில் நேற்றும், இன்றும் நடக்கிறது.
இதில், 12 கல்லுாரி அணிகள் பங்கேற்றுள்ளன. சுகுணா நிறுவனங்களின் தலைவர் லட்சுமிநாராயணசாமி, இயக்குனர் ஸ்ரீகாந்த் கண்ணன் ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தனர்.
முதல் போட்டியில், பார்க் இன்ஜி., கல்லுாரி அணி, 38-11 என்ற புள்ளி கணக்கில், ஆர்.வி.எஸ்., ஐ.எம்.எஸ்., அணியையும், ஆர்.வி.எஸ்., டெக்னிக்கல் கேம்பஸ் அணி, 36-32 என்ற புள்ளி கணக்கில் கதிர் இன்ஜி., கல்லுாரி அணியையும், சுகுணா கல்லுாரி அணி, 30-17 என்ற புள்ளி கணக்கில் ஜே.ஐ.டி., அணியையும் வென்றது.
தொடர்ந்து, ஆர்.வி.எஸ்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி அணி, 41-15 என்ற புள்ளி கணக்கில், தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரி அணியையும், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி அணி, 34-8 என்ற புள்ளி கணக்கில், ஆர்.வி.எஸ்., டெக்னிக்கல் கேம்பஸ் அணியையும் வீழ்த்தியது.
பார்க் கல்லுாரி அணி, 28-17 என்ற புள்ளி கணக்கில், சி.ஐ.டி., கல்லுாரி அணியை வென்றது. இன்று, அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடக்கின்றன. கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஜோதிலட்சுமி போட்டிகளை நடத்தி வருகிறார்.