/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவில் அருகேயுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
/
கோவில் அருகேயுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
கோவில் அருகேயுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
கோவில் அருகேயுள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு
ADDED : பிப் 09, 2025 12:36 AM
கோவை : தைப்பூசம் முன்னிட்டு அனைத்து முருகன் கோவில்களில் கோலகலமாக சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இச்சமயத்தில், கோவில் அருகில் புதுப்புது கடைகள் அமைக்கப்படும். உணவு சார்ந்த கடைகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமுறைகளின் படி, உணவு பாதுகாப்புத்துறையின் பதிவு எண் பெற்றவர்களே உணவு பொருட்களை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் இயலும். இதுபோன்ற திருவிழா சமயங்களில் புதிய கடைகள் பல எவ்வித விதிமுறைகளும் பின்பற்றாமல் பல்வேறு உணவு பொருட்களை விற்பனை செய்ய துவங்கிவிடுகின்றனர்.
மாநிலம் முழுவதும் தைப்பூச சிறப்பு வழிபாடு வரும், 11ம் தேதியும், கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், 10ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதுபோன்ற சமயங்களில், இனிப்புகள், உணவுகளை தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவை இன்றியும் விற்பனை செய்துவருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக, அறநிலையத்துறை பரிந்துரையின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு பணிகளுக்கு தயாராகியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், ''தைப்பூசம் முன்னிட்டு கோவில்கள் முன் பல கடைகள் புதிதாக அமைக்கப்படுகிறது.
இதுபோன்ற, புதிய, பழைய கடைகளில் ஆய்வுகள் மேற்கொள்ள உணவுபாதுகாப்புத்துறை குழு தயார்நிலையில் உள்ளது. உரிய எப்.எஸ்.எஸ்.ஐ.. பதிவு உள்ளவர்கள் மட்டுமே விற்பனையில் ஈடுபடமுடியும்.
''கோவையில் தைப்பூசம் முன்னிட்டும், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம் முன்னிட்டும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது,'' என்றார்.