/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்காம் தொழில்துறை புரட்சி இண்டஸ்ட்ரி 4.0
/
நான்காம் தொழில்துறை புரட்சி இண்டஸ்ட்ரி 4.0
ADDED : செப் 30, 2025 10:57 PM
தொ ழில் 4.0 அல்லது இண்டஸ்ட்ரி 4.0 என்பது நான்காவது தொழில்துறை புரட்சியாகும். இது உற்பத்தி, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரத்தில் பெரிய மாற்றங்களை நோக்கி நகர்கிறது. செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், இன்டர்நெட் ஆப் திங்ஸ், சைபர்-பிஸிகல் அமைப்புகள் போன்ற புதிய டிஜிட்டல் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய வளர்ச்சியாகும்.
தொழில் 4.0 என்பது உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில்களில் டிஜிட்டல் மாற்றங்களை நிகழ்த்துவதாகும். இது முதல்முறையாக ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆட்டோமேஷன், தகவல் பரிமாற்றம், ஸ்மார்ட் தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தொழிலை மேம்படுத்துவது இதன் முக்கிய நோக்கம்.
இணையம், செயற்கை நுண்ணறிவு, 3டி பிரிண்டிங், பிக் டேட்டா போன்றவை, தொழில் 4.0வின் மிக முக்கிய அங்கங்கள்.
இயந்திரங்களை இன்டர்நெட் ஆப் திங்ஸ் வாயிலாக தொடர்பு கொண்டு, தரவுகளைப் பயன்படுத்தும் திறன்; செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் மூலம் செயல்திறனை அதிகரித்தல், ஸ்மார்ட் தொழிற்சாலைகள், தானியங்கிய உற்பத்தி, தானியங்கி ரோபோக்கள், தரவு பகுப்பாய்வு ஆகியவை, முந்தைய தொழில் நடைமுறைகளில் இருந்து, தொழில் 4.0-வை முற்றிலும் வேறுபடுத்திக் காட்டுகின்றன.
தொழில்துறை 4.0 புரட்சியானது, உலக பொருளாதாரத்தை துரித மாற்றத்துக்கு உட்படுத்தி, எண்ணிலடங்கா பலன்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.